கவர்னர் உரைக்கு எதிர்ப்பு: சட்டசபையில் இருந்து திமுக வெளிநடப்பு


கவர்னர் உரைக்கு எதிர்ப்பு: சட்டசபையில் இருந்து திமுக வெளிநடப்பு
x
தினத்தந்தி 6 Jan 2020 10:15 AM IST (Updated: 6 Jan 2020 10:15 AM IST)
t-max-icont-min-icon

கவர்னர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

சென்னை,

ஆண்டுதோறும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டின் (2020) முதல் கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது.

கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று சட்டசபையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார்.

தமிழக அரசின் திட்டங்கள் குறித்து கவர்னர் விளக்கம் அளித்தார். அப்போது கவர்னர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சி எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து கவர்னர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தொடர்ந்து அமமுக எம்.எல்.ஏ தினகரன், தமீம் அன்சாரி ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர்.

Next Story