181 குரூப்-1 பணி இடங்களுக்கு நடந்து முடிந்த தேர்வில் மனிதநேய பயிற்சி மையத்தில் படித்த 40 பேர் வெற்றி
181 குரூப்-1 பணியிடங்களுக்கு நடந்து முடிந்த தேர்வில் மனிதநேய மையத்தில் படித்த 40 பேர் வெற்றி பெற்று இருக்கின்றனர். அதில் 6 பேருக்கு துணை கலெக்டர் பதவி கிடைத்துள்ளது.
சென்னை,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நேர்முகத் தேர்வு அடங்கிய குரூப்-1 பதவிகளுக்கான அறிவிப்பை கடந்த ஆண்டு (2019) ஜனவரி மாதம் வெளியிட்டது.
அதில், துணை கலெக்டர் 27, போலீஸ் துணை சூப்பிரண்டு 90, வணிகவரித்துறை உதவி கமிஷனர் 18, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் 13, மாவட்ட பதிவாளர் 7, கிராம மேம்பாடு உதவி இயக்குனர் 15, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் 8, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை மாவட்ட அலுவலர் 3 ஆகிய 181 காலி பணியிடங்கள் அடங்கும்.
இதற்கு ஏராளமானோர் விண்ணப்பித்து தேர்வு எழுதினார்கள். முதல்நிலை தேர்வு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 3-ந்தேதி நடந்தது. அதில் வெற்றி பெற்ற 9 ஆயிரத்து 850 பேருக்கு முதன்மை தேர்வு கடந்த ஜூலை மாதம் 12, 13 மற்றும் 14-ந்தேதிகளில் நடைபெற்று முடிந்தது.
முதன்மை தேர்வுக்கு மொத்த மதிப்பெண்கள் 750 ஆகும். இதுபோக நேர்முகத்தேர்வு 100 மதிப்பெண்ணுக்கு நடைபெறும். அதற்கான தேர்வு கடந்த மாதம் (டிசம்பர்) 23, 24, 26, 27, 28, 30 மற்றும் 31-ந்தேதிகளில் நடந்தது.
முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் டி.என்.பி.எஸ்.சி. தரவரிசை பட்டியலை கடந்த மாதம் 31-ந்தேதி வெளியிட்டது. அதன் அடிப்படையில் குரூப்-1 பதவிகளுக்கான கலந்தாய்வு சென்னை பாரிமுனையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது.
தரவரிசை பட்டியலில் இடம்பெற்று இருந்தவர்கள் கலந்தாய்வில் கலந்து கொண்டு, தாங்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இதில் சைதை துரைசாமியின் மனிதநேய பயிற்சி மையத்தில் படித்த 40 பேர் வெற்றி பெற்று இருக்கின்றனர்.
இதுகுறித்து மனிதநேய அறக்கட்டளையின் நிறுவன தலைவர் சைதை துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
குரூப்-1 நேர்முகத் தேர்வை வெற்றிகரமாக எதிர்கொள்வது குறித்த சிறந்த பயிற்சியாளர்கள் மூலம் தேர்வர்களுக்கு இலவச பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டவர்களுக்கு இலவச விடுதி, உணவு உள்பட அனைத்து வசதிகளும் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டன.
பயிற்சி பெற்றவர்களில் 12 மாணவிகள், 8 மாணவர்கள் நேர்முகத் தேர்வில் அதிகபட்சமாக 75 மதிப்பெண்கள் பெற்றனர். மனிதநேய பயிற்சி மையத்தில் படித்து முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்ற 40 பேர் இந்த கலந்தாய்வில் பணி ஒதுக்கீடு பெற்றுள்ளனர்.
அதன்படி, துணை கலெக்டர் பதவிக்கு 6 பேரும், போலீஸ் துணை சூப்பிரண்டு பதவிக்கு 20 பேரும், வணிக வரித்துறை உதவி கமிஷனர் பதவிக்கு 7 பேரும், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் பதவிக்கு 3 பேரும், மாவட்ட பதிவாளர் பதவிக்கு ஒருவரும், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் பதவிக்கு 2 பேரும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பதவிக்கு ஒருவரும் என மொத்தம் 40 பேர் தேர்வாகியுள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பணி ஒதுக்கீடு பெற்றவர்கள் சைதை துரைசாமியை நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Related Tags :
Next Story