பொங்கல் பண்டிகைக்கு 29,213 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி
பொங்கல் பண்டிகைக்கு 29,213 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை,
போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
பொங்கல் பண்டிகைக்கு ஜனவரி 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் தற்போதைய பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் செல்லும்.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கட்டுப்பாடு அறை மூலம் பேருந்துகள் இயக்கம் கண்காணிக்கப்படும். மேலும், சிறப்பு பஸ்கள் முன்பதிவு செய்ய 17 மையங்கள் அமைக்கப்படும்.
சென்னையிலிருந்து 16,075 பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து 9,995 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story