நெல்லை கண்ணன் கைது ஏன்? கோலமிட்டவர்கள் ஏன் கைது? முதலமைச்சர் விளக்கம்
நெல்லை கண்ணன் கைது ஏன்? கோலமிட்டவர்கள் ஏன் கைது? என முதலமைச்சர் பழனிசாமி சட்டசபையில் விளக்கம் அளித்தார்.
சென்னை,
தமிழக சட்டசபை இந்த ஆண்டின் முதல் கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார்.
இந்நிலையில் சட்டசபையின் 2-வது நாள் கூட்டம் இன்று தொடங்கியது.
நெல்லை கண்ணன் கைது குறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரின்ஸ் எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் பழனிசாமி பதில் அளித்து பேசுகையில்,
நெல்லை கண்ணன் விவகாரத்தில் சட்டரீதியாக நடவடிக்கை எடுத்துள்ளோம். எந்த கட்சி தலைவராக இருந்தாலும் அவர்களைப்பற்றி வரம்பு மீறி பேசக்கூடாது. நெல்லை கண்ணனை கைது செய்ய வேண்டும் என்ற எந்த உள்நோக்கமும் அரசுக்கு இல்லை என்று கூறினார்.
மேலும் வேறொருவர் வீட்டு வாசலில் கோலமிட்டது குறித்து வீட்டு உரிமையாளர்கள் புகாரளித்ததால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். கோலம் போடுபவர்கள் தங்கள் வீட்டு வாசலில் கோலம் போட்டிருந்தால் எந்த பிரச்சினையும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story