ஓய்வூதியர்களுக்கு சிறப்பு காப்பீடு திட்டம் : "2022-ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது" -ஓ.பன்னீர்செல்வம்


ஓய்வூதியர்களுக்கு சிறப்பு காப்பீடு திட்டம் : 2022-ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது -ஓ.பன்னீர்செல்வம்
x
தினத்தந்தி 8 Jan 2020 1:18 PM IST (Updated: 8 Jan 2020 1:18 PM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசின் ஓய்வூதியதாரர்களுக்கு, சிறப்பு அம்சங்களுடன் கூடிய புதிய காப்பீடு திட்டம் 2022-ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை

தமிழக சட்டசபை கூட்டத்தில் இன்று கேள்வி நேரத்தின் போது  கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் ஓய்வூதியதாரர்களுக்கு காப்பீடு திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படுமா என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை 2 லட்சத்து 96 ஆயிரத்து 266 நபர்களுக்கு, 909 கோடியே 37 லட்சம் ரூபாய் அளவுக்கு சிகிச்சை மேற்கொண்டிருப்பதாக கூறினார். 

ஓய்வூதியதாரர்களின் பெற்றோருக்கும் சிகிச்சை அளிக்க அரசு பரிசீலிக்க உள்ளதாகவும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

Next Story