எதிர்க்கட்சிகளிடம் இருந்து அரசு பாராட்டுக்களை எதிர்பார்க்கக் கூடாது - துரைமுருகன்
எதிர்க்கட்சிகளிடம் இருந்து அரசு பாராட்டுக்களை எதிர்பார்க்கக் கூடாது என எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் தெரிவித்தார்.
சென்னை
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக கூறிய தி.மு.க. உறுப்பினர் கிருஷ்ணசாமியின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், டெங்கு காய்ச்சல் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 9 மருத்துவக் கல்லூரி உள்பட சுகாதாரத் துறையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் பாராட்ட மனமில்லாத எதிர்க்கட்சிகள் எதிரிக்கட்சிகளாக குற்றம் குறை சொல்கிறார்களே தவிர பாராட்ட மனம் வரவில்லை என்றும் கூறினார்.
அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் எதிர்க்கட்சிகளிடம் இருந்து அரசு பாராட்டுக்களை எதிர்பார்க்கக் கூடாது . ஒரு முறை பேரறிஞர் அண்ணா உரையாற்றும் போது தாங்கள் ஆளும்கட்சிக்கு லாலி பாட வரவில்லை என்றும், குற்றம் குறையை எடுத்து சொல்லவே வந்ததாகவும் கூறியதை சுட்டிக்காட்டினார்.
அப்போது அதே அண்ணா தான் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று கூறியதாக அமைச்சர் குறிப்பிட, மல்லிகைக்கு மணம் இருந்தால் பரவாயில்லை என்றும் காய்ந்த பூவாக இருந்தால் என்ன செய்வது என்றும் துரைமுருகன் கேள்வி எழுப்பினார். இதனால் பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது.
Related Tags :
Next Story