மாநகராட்சி ஊழியர்களுக்கு யோகா பயிற்சி வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
சென்னை மாநகராட்சி ஊழியர்களுக்கு யோகா பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
சென்னை,
தமிழக சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின் போது தி.மு.க உறுப்பினர் மா.சுப்பிரமணியன் கேள்விக்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உடல் ஆரோக்கியம், முகப்பொழிவு பெற மற்றும் கோபத்தை குறைக்க யோகா மிகவும் அவசியம் என்றார்.
உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணியிடம் ஆலோசனை மேற்கொண்ட பின்னர் சென்னை மாநகராட்சி ஊழியர்களுக்கு யோகா பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
Related Tags :
Next Story