போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கொலை: தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்
போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கொலை விவகாரத்தில் தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் முன்னாள் மத்திய மந்திரியும், தமிழக பா.ஜனதா மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:–
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் தமிழக–கேரள எல்லையில் சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர், பயங்கரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்டு உள்ளார். தமிழக அரசு இதை விளையாட்டாக எடுத்து கொள்ளாமல் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். உடனடியாக இதுபற்றி விசாரிக்கவேண்டும்.
தமிழ்நாடு போலீஸ் மீது தொடர்ந்துள்ள நேரடி யுத்தமாக இதை கருதுகிறேன். இதில் முழு விசாரணை நடத்தி, குற்றவாளிகளை கைது செய்யவேண்டும். போலீஸ் மீது கை வைத்தால் ஒருகாலமும் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்பதை தெளிவுப்படுத்தும் வகையில் தமிழக அரசும், தமிழக போலீசும் துரித நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழக போலீஸ் அதிகாரி சுட்டு கொல்லப்பட்டதற்கு கேரள அரசு பதில் சொல்ல வேண்டும். தமிழக அரசு பயங்கரவாதிகளுக்கு செவி சாய்க்க கூடாது.
தமிழக பா.ஜனதா தலைவர் பதவிக்கான பணிகள் நடந்து வருகிறது. கூடிய விரைவில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story