பசியில் துடித்த குழந்தைகளுக்காக தனது தலைமுடியை விற்று பசியை போக்கிய தாய்!
சேலம் மாவட்டத்தில் பசியில் துடித்த குழந்தைகளுக்காக தனது தலைமுடியை விற்று பசியை போக்கிய தாய் போக்கி உள்ளார்.
சேலம்,
சேலம் மாவட்டம், மன்னார்பாளையம் பிரிவு பகுதியில் கணவனை இழந்த நிலையில் தனது 3 குழந்தைகளுடன் பிரேமா என்ற பெண் வசித்து வருகிறார். இந்நிலையில், பசியில் துடித்த குழந்தைகளுக்காக, தனது தலைமுடியை 150 ரூபாய்க்கு விற்று குழந்தைகளின் பசியை போக்கி உள்ளார்.
சமூக வலைதளங்கள் வாயிலாக பரவிய இந்த செய்தியால், பிரேமாவுக்கு, ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய், பண உதவி கிடைத்தது. மேலும், தமிழக அரசு அவருக்கு, மாதந்தோறும் உதவிதொகையாக ஆயிரம் ரூபாய் வழங்க, மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், அதற்கான உத்தரவு ஆணையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
மேலும், பிரேமாவுக்கு, ரேஷன் அட்டையும் வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே, செய்தி வெளியிட்ட தந்தி டிவிக்கும், பிரேமா நன்றி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story