உள்ளாட்சியில் உரிய இடங்களை திமுக வழங்கும் என எதிர்பார்க்கிறோம் - ப.சிதம்பரம்


உள்ளாட்சியில் உரிய இடங்களை திமுக வழங்கும் என எதிர்பார்க்கிறோம் - ப.சிதம்பரம்
x
தினத்தந்தி 10 Jan 2020 9:46 PM IST (Updated: 10 Jan 2020 9:56 PM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சியில் உரிய இடங்களை திமுக வழங்கும் என எதிர்பார்க்கிறோம் என முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

உள்ளாட்சித் தேர்தலில் பதவிகள் வழங்குவதில் திமுக கட்சியினர் கூட்டணி தர்மத்திற்கு எதிராக செயல்படுவதாக காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. இது தமிழக அரசியலில் பரபரப்பை உண்டாக்கியது. 

இந்நிலையில், இது குறித்து முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியதாவது:-

உள்ளாட்சியில் காங்கிரசுக்கான உரிய இடங்களை திமுக வழங்கும் என எதிர்பார்க்கிறோம். கூட்டணி தர்மத்தை திமுக கடைபிடிக்கவில்லை என்ற வருத்தத்தை தமிழக காங்கிரஸ் வெளிப்படுத்தி உள்ளது. 

காங்கிரஸ் ஆதங்கத்தை வெளிப்படுத்தியதே தவிர, இது மிரட்டல் அல்ல. 2021 சட்டமன்ற தேர்தலிலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story