ஊரக உள்ளாட்சி மறைமுக தேர்தலில் டிஎஸ்பிக்கு அரிவாள் வெட்டு; 2 பேர் கைது


ஊரக உள்ளாட்சி மறைமுக தேர்தலில் டிஎஸ்பிக்கு அரிவாள் வெட்டு; 2 பேர் கைது
x
தினத்தந்தி 11 Jan 2020 7:28 AM GMT (Updated: 11 Jan 2020 7:28 AM GMT)

ஊரக உள்ளாட்சி மறைமுக தேர்தலில் டிஎஸ்பிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை

27 மாவட்டங்களில் ஊராட்சி தலைவர், துணை தலைவர் மறைமுக தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தலைவர் யார் என்பதை நிர்ணயிக்கும் முடிவு சுயேட்சை உறுப்பினர்களின் கையில் உள்ளது.  பெரும்பான்மைக்கு 10 உறுப்பினர்கள் தேவை என்பதால் தலைவர் பதவியை பிடிப்பதில் அதிமுக, திமுக இடையே போட்டி நிலவுகிறது. 27 மாவட்டங்களில் இழுபறியாக உள்ள ஒன்றியங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

* விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியத்தில் அதிமுக - திமுகவினர் மோதலை தடுக்க முயன்ற  அருப்புக்கோட்டை  டி.எஸ்.பி வெங்கடேசனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். போலீஸ் குவிக்கப்பட்டு உள்ளது. 

* திமுக கவுன்சிலர் சந்திரமதி அண்ணாதுரை, அதிமுக சார்பில் வேட்பாளராக நின்று 12 ஓட்டுகள் பெற்று ஒன்றியக் குழுத் தலைவராக வெற்றி பெற்றார். திமுக சார்பில் சுமித்ரா தேவி 8 வாக்குகள் பெற்றார். இந்த ஒன்றியத்தில் அதிமுக அதிக இடங்களில் வென்றும், தலைவர் பதவி பட்டியலின பெண் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டதால், அந்த பிரிவு கவுன்சிலர் இல்லாத நிலை உள்ளது.

*  கோவில்பட்டி ஒன்றிய தேர்தல் அலுவலருக்கு நெஞ்சு வலி  ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தேர்தல் அலுவலர் வராததால் மறைமுக தேர்தல் பணிகள் தொடங்கவில்லை.

* பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி தலைவராக திமுக உறுப்பினர் ராஜேந்திரன் தேர்வு செய்யபட்டார்.  பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 4 ஊராட்சி ஒன்றியங்களின் தலைவர் பதவிகளையும் கைப்பற்றியது திமுக.

* மதுரை மேலூர் ஒன்றிய தலைவராக அதிமுகவை சேர்ந்தவர் அறிவிக்கப்பட்டார். பட்டாசு வெடித்து கொண்டாடியதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்து  போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

* புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி குழு தலைவராக அதிமுகவின் ஜெயலட்சுமி தேர்வு செய்யபட்டார். திமுக கூட்டணி அதிக உறுப்பினர்களை வைத்திருந்த நிலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளது.

Next Story