இந்திய மக்களை போன்ற அப்பாவிகளை நான் எங்கும் பார்த்தது இல்லை - ப.சிதம்பரம்
இந்திய மக்களை போன்ற அப்பாவிகளை நான் எங்கும் பார்த்தது இல்லை என முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
சென்னை,
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவர் கூறியதாவது:
இந்திய மக்களை போன்ற அப்பாவிகளை நான் எங்கும் பார்த்தது இல்லை. நாளிதழ்களில் வெளிவரும் செய்திகளை தான் நம்புகிறார்கள். இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி கொடுத்துவிட்டதாக சொல்கிறார்கள். 99 சதவீத கிராமங்களில் கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்ததையும் நம்புகிறார்கள்.
அதேபோன்று, ஆயுஸ்மான் பாரத் திட்டத்தையும் மக்கள் நம்புகின்றனர். டெல்லியை சேர்ந்த கார் டிரைவர் ஒருவரின் தந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. ஆயுஸ்மான் பாரத் திட்ட அடையாள அட்டையை காண்பித்து சிகிச்சை பெறும்படி அவரிடம் கூறினேன். ஆனால், அவர்களுக்கு, ஆயுஸ்மான் பாரத் திட்டம் உள்ளதே தெரியவில்லை.
அவர்கள் அனைத்து மருத்துவமனைக்கு சென்றும் தெரியவில்லை. ஆனால், இந்த திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளதாக நாம் நம்புகிறோம். நோய் வந்தால் பிரதமரின் திட்டத்தின்கீழ் சிகிச்சை பெறலாம் என்று நினைப்பது அப்பாவித்தனமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story