வில்சனின் குடும்பத்திற்கு திமுக ரூ.5 லட்சம் நிதியுதவி - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


வில்சனின் குடும்பத்திற்கு திமுக ரூ.5 லட்சம் நிதியுதவி -  மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
x
தினத்தந்தி 11 Jan 2020 7:04 PM IST (Updated: 11 Jan 2020 7:11 PM IST)
t-max-icont-min-icon

சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் வில்சன் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை,

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சுட்டுக்கொல்லப்பட்ட சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் வில்சனின் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். 

சட்டம் ஒழுங்கு பராமரிப்பில் தமிழகம் முதலிடம் எனக்கூறி ஆட்சியாளர்கள் மக்களை ஏமாற்றி வருகின்றனர். போலீஸ் அதிகாரிகளின் உயிருக்கே பாதுகாப்பு இல்லை என்பது அதிமுக ஆட்சியில் மோசமான வாய்ப்பாகும்.

வில்சன் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையில் பணிபுரிவோர் கொல்லப்படுவது இதுவே கடைசியாக இருக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story