திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஜனவரி 21ம் தேதி செயற்குழு கூட்டம் - பொதுச்செயலாளர் க. அன்பழகன்


திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஜனவரி 21ம் தேதி செயற்குழு கூட்டம் - பொதுச்செயலாளர் க. அன்பழகன்
x
தினத்தந்தி 11 Jan 2020 11:34 PM IST (Updated: 11 Jan 2020 11:38 PM IST)
t-max-icont-min-icon

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஜனவரி 21ம் தேதி செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக பொதுச்செயலாளர் க. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

திமுக தலைமைச் செயற்குழுக் கூட்டம் ஜனவரி 21-ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் க. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. தலைமை செயற்குழு அவசர கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் வருகிற 21-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும். கூட்டத்தில் கட்சி ஆக்கப்பணிகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. எனவே, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்து பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளுக்கான தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில் இந்தச் செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story