மாநில செய்திகள்

தொண்டர்கள் என் முதல் கடவுள், விரைவில் நல்ல உடல் நலத்துடன் மீண்டும் வருவேன் - பொங்கல் விழாவில் விஜயகாந்த் பேச்சு + "||" + Volunteers are my first god Vijayakanth Speech at Pongal Festival

தொண்டர்கள் என் முதல் கடவுள், விரைவில் நல்ல உடல் நலத்துடன் மீண்டும் வருவேன் - பொங்கல் விழாவில் விஜயகாந்த் பேச்சு

தொண்டர்கள் என் முதல் கடவுள், விரைவில் நல்ல உடல் நலத்துடன் மீண்டும் வருவேன் - பொங்கல் விழாவில் விஜயகாந்த் பேச்சு
தொண்டர்கள் தான் எனது முதல் கடவுள், விரைவில் நல்ல உடல் நலத்துடன் மீண்டும் வருவேன் என பொங்கல் விழாவில் விஜயகாந்த் கூறினார்.
சென்னை,

தேமுதிக சார்பில்  அம்பத்தூர் பகுதியில் கொரட்டூர் பேருந்து நிலையம் அருகில்  பொங்கல் விழா நடைபெற்றது. இதில் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, துணைச் செயலாளர் சுதீஷ் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினர். 

பொங்கல் விழாவில் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது:-

தமக்காக பிரார்த்தனை செய்யும் தொண்டர்கள் தான் எனது முதல் கடவுள்.  விரைவில் பூரண உடல்நலம் பெற்று மீண்டும் வருவேன். தேமுதிக தொண்டர்கள் மற்றும் தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

அதனை தொடர்ந்து  விழாவில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், 'நமது நாடு எந்த நாடாக இருந்தாலும் இந்துக்களும் இஸ்லாமியர்களும் சகோதரத்துவத்துடன் வாழ்கின்றனர். அவர்களிடையே பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் வகையில் தீவிரவாத செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது. அடுத்து வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக அதிக இடங்களை கைப்பற்ற தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார்.