மத்திய நாடாளுமன்ற ஆட்சி மொழிக் குழு பொங்கல் கொண்டாடப்படும் நாளில் ஆய்வு செய்வது கண்டனத்திற்குரியது -மு.க.ஸ்டாலின்


மத்திய நாடாளுமன்ற ஆட்சி மொழிக் குழு பொங்கல் கொண்டாடப்படும் நாளில் ஆய்வு செய்வது கண்டனத்திற்குரியது   -மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 13 Jan 2020 9:16 AM GMT (Updated: 13 Jan 2020 10:42 AM GMT)

மத்திய நாடாளுமன்ற ஆட்சி மொழிக் குழு பொங்கல் கொண்டாடப்படும் நாளில் ஆய்வு செய்வது கண்டனத்திற்குரியது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னையில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் பொங்கல் விடுமுறை நாட்களான ஜன.14, 15, 16 ஆகிய தேதிகளில் நாடாளுமன்ற ஆட்சி மொழிக் குழு ஆய்வு செய்ய உள்ளது.

இந்நிலையில் இக்குழு இன்று சென்னை வந்துள்ளது.  இக்குழு மத்திய அரசு அலுவலகங்களில் தனது ஆய்வை வரும் ஜன.14, 15,16 தேதிகளில் நடத்துகிறது. 

இதுகுறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் "இந்தி மொழிப் பயன்பாடு" குறித்து ஆய்வு செய்ய, மத்திய நாடாளுமன்ற ஆட்சி மொழிக் குழு பொங்கல் திருநாள் கொண்டாடப்படும் ஜனவரி 14, 15, 16 ஆகிய தேதிகளில் வருவது கடும் கண்டனத்திற்கு உரியது.

தமிழர்களின் தன்மான உணர்வுக்கும், மொழி உணர்வுக்கும், கலாச்சார மற்றும் பண்பாட்டு உணர்வுக்கும் மதிப்பளித்து, பொங்கல் விடுமுறை நாட்களில் நடைபெறும் இந்த ஆய்வை ரத்து செய்து, தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலக ஊழியர்கள் நிம்மதியாக பொங்கல் திருநாளைக் கொண்டாட வழிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Next Story