நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கிய பின் கருத்து சொல்கிறேன்; திருநாவுக்கரசர் எம்.பி.


நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கிய பின் கருத்து சொல்கிறேன்; திருநாவுக்கரசர் எம்.பி.
x

நடிகர் ரஜினிகாந்த் முதலில் கட்சி தொடங்கட்டும், அதன் பின்னர் கருத்து சொல்கிறேன் என திருநாவுக்கரசர் எம்.பி. கூறினார்.

சென்னை,

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் மற்றும் எம்.பி.யான திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசினார்.  அவர் பேசும்பொழுது, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

தி.மு.க. பொது செயலாளர் அன்பழகனின் உடல்நலம் குணமடைய வேண்டி கொள்கிறேன்.  வருகிற மார்ச் 7ந்தேதி காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும்.  இதில், உள்ளாட்சி தேர்தல் மற்றும் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறினார்.

தொடர்ந்து, மாநிலங்களவை தேர்தலில் தி.மு.க. ஓர் இடம் வழங்கினால் மகிழ்ச்சி என்று கூறிய அவர், நடிகர் ரஜினிகாந்த் பற்றி பேசும்பொழுது, முதலில் அவர் கட்சி தொடங்கட்டும்.  அதன் பின்னர் கருத்து சொல்கிறேன் என கூறினார்.

Next Story