மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கிய பிரதமருக்கு நன்றி - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி


மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கிய பிரதமருக்கு நன்றி - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 1 March 2020 7:46 PM IST (Updated: 1 March 2020 7:46 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரி தொடங்க அனுமதி தந்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.

மதுரை,

மதுரை விமான நிலையத்தில் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரி தொடங்க அனுமதி தந்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். 

துறை வாரியாக அதிக தேசிய விருதுகளை பெற்றுள்ள மாநிலம் தமிழகம். அரசுத்துறைகளை பற்றி நடிகர் கமல்ஹாசனுக்கு என்ன தெரியும்? அரசின் எந்த துறையை பற்றியும் கமல்ஹாசனுக்கு தெரியாது.

என்.பி.ஆரை கொண்டு வந்தது காங்கிரஸ் தான். தமிழகத்தில் அதனை அமல்படுத்தியது திமுக தான். என்.பி.ஆரில் எந்த ஆதாரங்களையும் சமர்பிக்க வேண்டியதில்லை என தெளிவுபடுத்தி விட்டார்கள். 

எந்த துறையில் முறைகேடு செய்திருந்தாலும் அதில் நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது. அதிமுக மூலம் விலாசம் பெற்றவர்கள் துரோகம் செய்தால் முகவரி தெரியாமல் போய்விடுவார்கள். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையைபோன்று அனைத்து வசதிகளுடன் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் தேமுதிக மாநிலங்களவை எம்.பி.சீட் கேட்பது குறித்த நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர் பழனிசாமி,  வீட்டில் பெண் இருந்தால் திருமணம் செய்ய கேட்பது போல் கூட்டணி கட்சியினரும் சீட் கேட்பார்கள் தான் என்று கூறினார்.

Next Story