இந்தியன் - 2 படப்பிடிப்பு விபத்து: கமல்ஹாசனுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸ் சம்மன்
இந்தியன் - 2 படப்பிடிப்பு தள விபத்து சம்பவம் தொடர்பாக நடிகர் கமல்ஹாசனுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸ் சம்மன் அனுப்பி உள்ளது.
சென்னை,
லைகா நிறுவனம் தயாரிப்பில் சங்கர் இயக்கி வரும் இந்தியன் - 2 திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
இந்த திரைப்படத்திற்காக சென்னை அருகே பூந்தமல்லி நசரத்பேட்டையில் உள்ள தனியார் படப்பிடிப்பு தளத்தில் ராட்சத கிரேன்கள் மூலம் பிரம்மாண்ட செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.
இந்தநிலையில் பிப்ரவரி 19-ம் தேதி செட் அமைக்கும் பணிகள் நடைபெற்ற போது எதிர்பாராத விதமாக கிரேன் அறுந்து விபத்து ஏற்பட்டதில் உதவி இயக்குனர் மது, சங்கரின் இணை இயக்குனர் கிருஷ்ணா, உதவி நடன இயக்குனர் சந்திரன் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இந்தியன்-2 படப்பிடிப்பில் நடந்த விபத்தில் 3 பேர் பலியாகி பலர் காயம் அடைந்த சம்பவம் திரையுலகினரை உலுக்கியது.
இந்நிலையில் இந்தியன் - 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக இயக்குனர் ஷங்கரிடம் விசாரணை நடத்தியதையடுத்து நடிகர் கமல்ஹாசனுக்கு காவல்துறை சம்மன் அனுப்பி உள்ளது. நாளை மறுநாள் சென்னை வேப்பேரி மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் தர உத்தரவிடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story