மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு


மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 1 March 2020 9:06 PM IST (Updated: 1 March 2020 9:06 PM IST)
t-max-icont-min-icon

மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ள திமுக வேட்பாளர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

சென்னை,

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் மார்ச் 26-ம் தேதி நடைபெற உள்ளது.  

இந்நிலையில்  மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான திமுக வேட்பாளர்களாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

தற்போது மாநிலங்களவை எம்.பி.யாக உள்ள திருச்சி சிவாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் திருச்சி சிவா செய்தியாளர்களிடம் கூறுகையில்,  என் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் வாய்ப்பு அளித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். திமுகவில் உழைப்பவர்களுக்கு நிச்சியமாக அங்கீகாரம் உண்டு என்பதற்கு இது உதாரணம் என்று கூறினார்.

Next Story