தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஏப்ரல் 9 ஆம் தேதி வரை நடைபெறும்- சபாநாயகர் தனபால்


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 2 March 2020 11:21 AM IST (Updated: 2 March 2020 11:21 AM IST)
t-max-icont-min-icon

தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஏப்ரல் 9 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என அலுவல் ஆய்வு குழு கூட்டத்திற்கு பின்னர் சபாநாயகர் தனபால் கூறினார்.

சென்னை
 
தமிழக சட்டப்பேரவையின் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று காலை நடைபெற்றது. அதில் மார்ச்- 9 ஆம் தேதி தொடங்கும் பேரவை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் திமுக சார்பில் துரைமுருகன், சக்கரபாணி, பிச்சாண்டி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.  

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச்- 9 ஆம் தேதி முதல் ஏப்ரல் 9 ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சபாநாயகர் தனபால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஏப்ரல் 9 ஆம்  தேதி வரை நடைபெறவுள்ளது. கூட்டத்தொடரில் பல்வேறு துறைகளின்  மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற உள்ளது.

மார்ச்- 9 ஆம் தேதி எம்எல்ஏக்கள் காத்தவராயன், கே.பி.பி.சாமி, முன்னாள் எம்எல்ஏ ப.சந்திரன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும்.

மார்ச்- 11 ஆம் தேதி வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற உள்ளது.

மார்ச்- 12 ஆம் தேதி பள்ளிக்கல்வி, உயர்கல்வி மற்றும் இளைஞர் நலத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும்.

மார்ச்- 13 ஆம் தேதி எரிச்சக்தி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும்.

 மார்ச்- 16 ஆம் தேதி உள்ளாட்சி துறை, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல்,ஊரக வளர்ச்சித்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும்.

மார்ச்- 17 ஆம் தேதி மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும்.

மார்ச்- 18 ஆம் தேதி பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை, மார்ச்- 19 ஆம் தேதி கூட்டுறவு மற்றும் உணவுத்துறை, மார்ச்- 20 ஆம் தேதி சட்டத்துறை, மார்ச்- 21ஆம் தேதி சமூக நலம், மார்ச்- 23 ஆம் தேதி வீட்டு வசதித்துறை உள்ளிட்ட துறைகளின் மானிய கோரிக்கைகள் மீது விவாதம்நடைபெறும்.

மார்ச் 27 ந்தேதி காவல்துறை மானியகோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும்

மார்ச்- 31 வேளாண்துறை மானியகோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும்
என கூறினார்.

Next Story