8,888 சீருடைப் பணியாளர் தேர்வு நடைமுறையை நிறுத்தி வைக்க பிறப்பித்த உத்தரவு ரத்து


8,888 சீருடைப் பணியாளர் தேர்வு நடைமுறையை நிறுத்தி வைக்க பிறப்பித்த உத்தரவு ரத்து
x
தினத்தந்தி 3 March 2020 6:48 AM GMT (Updated: 3 March 2020 6:48 AM GMT)

8,888 சீருடைப் பணியாளர் தேர்வு நடைமுறையை நிறுத்தி வைக்க பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணைய தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம்,   8,888 பேருக்கான சீருடைப் பணியாளர்கள் தேர்வு நடைமுறையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.    மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க டிஜிபி, சீருடை பணியாளர் தேர்வாணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில்,  தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்திருந்தது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.  அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண்,  “இந்த வழக்கில் அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்திருப்பதாக தெரிவித்தார். 

இதையடுத்து,  8,888 சீருடைப் பணியாளர் தேர்வு நடைமுறையை நிறுத்தி வைக்க பிறப்பித்த உத்தரவு ரத்து செய்வதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்டு வழக்கை விரைந்து முடிக்க தனி நீதிபதிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. 

Next Story