தமிழகத்தில் 4 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்


தமிழகத்தில் 4 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
x
தினத்தந்தி 3 March 2020 4:12 PM IST (Updated: 3 March 2020 4:12 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில், 4 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 4 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தொ​ழில்துறை கூடுதல் ஆணையராக இருந்த டி.பி. ராஜே​ஷ், தமிழ்நாடு சுற்றுலாத் துறை நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். அரசின் தனிச் செயலாளராக இருந்த சுகந்தி, காகிதம் மற்றும் எழுதுபொருள் கழக ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். 

உதவி தேர்தல் ஆணையராக இருந்த சந்​தீப் சக்சேனா, சுற்றுலா மற்றும் கலாச்சார துறை கூடுதல் தலைமை செயலாளர் பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார். தமிழ்நாடு உப்பு கழக நிர்வாக இயக்குநராக அமுதவள்ளி நியமிக்கப்பட்டுள்ளார்.

Next Story