மேட்டூர் சரபங்கா நீரேற்று திட்டத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார்
மேட்டூர் சரபங்கா நீரேற்று திட்டத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
சென்னை,
சேலம் மாவட்டம், இருப்பாளி கிராமத்திலுள்ள மேட்டுப்பட்டி ஏரி அருகில் அரசு விழா நடத்தப்படுகிறது. இந்த அரசு விழாவில் ரூ.565 கோடி மதிப்பிலான, மேட்டூர் அணையின் மழைக்கால வெள்ள உபரிநீரை சேலம் மாவட்டத்தில் உள்ள சரபங்கா வடிநிலப்பகுதியில் வறண்ட ஏரிகளுக்கு நீரேற்றம் மூலம் நீர்வழங்கும் திட்டத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி தொடக்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தினால் சரபங்கா வடிநில பகுதியில் வரட்சியான 100 ஏரிகள் மற்றும் குளங்கள் ஆகியவற்றிற்கு மேட்டூர் அணை உபரிநீர் மின்மோட்டார் மூலம் நீரேற்றம் செய்யப்படும். இதனால் ஓமலூர், மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி ஆகிய 4 தாலுகாக்களில் உள்ள விவசாய நிலங்கள் பயன்பெறும். வறட்சிக்கு உள்ளான பகுதிகளான நங்கவள்ளி, மேச்சேரி, தாரமங்கலம், ஓமலூர், கெங்கவல்லி, எடப்பாடி ஆகிய ஒன்றியப்பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் பயன்பெறும்.
இந்தத்திட்டத்தினால் இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்படுவதோடு, இப்பகுதிமக்களின் குடிநீர் பற்றாக்குறை தீர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மேட்டூர் அணையின் உபரி நீரை, மின் மோட்டார் மூலம் 100க்கும் மேற்பட்ட ஏரிகள், குளங்களுக்கு நீரேற்றம் செய்யும் திட்டமான மேட்டூர் சரபங்கா நீரேற்று திட்டத்தை இன்று முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டி தொடக்கி வைக்கிறார்.
Related Tags :
Next Story