சிவகாசி பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; ஒருவர் பலி
சிவகாசி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் பலியாகி உள்ளார்.
சிவகாசி,
விருதுநகரின் சிவகாசி அருகே பட்டாசு ஆலைகள் பல செயல்பட்டு வருகின்றன. இதில் காக்கிவாடன்பட்டி கிராமத்தில் இருந்த பட்டாசு ஆலை ஒன்றில் இன்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் அந்த ஆலையின் 3 அறைகள் இடிந்து தரைமட்டமாகின.
வெடிவிபத்தில் சிக்கி குருசாமி என்ற தொழிலாளி உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்த சின்னமுனியாண்டி என்பவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
பட்டாசு ஆலையில் உராய்வு காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டிருக்க கூடும் என கூறப்படுகிறது. இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story