எதிர்காலத்தில் மக்கள் தனியாருக்கு செல்வதை விட அரசு மருத்துவமனைக்கு வரும் சூழல் ஏற்படும் - முதலமைச்சர் பழனிசாமி பேச்சு


எதிர்காலத்தில் மக்கள் தனியாருக்கு செல்வதை விட அரசு மருத்துவமனைக்கு வரும் சூழல் ஏற்படும் - முதலமைச்சர் பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 4 March 2020 6:13 PM IST (Updated: 4 March 2020 6:13 PM IST)
t-max-icont-min-icon

எதிர்காலத்தில் மக்கள் தனியார் மருத்துவமனைக்கு செல்வதை விட அரசு மருத்துவமனைக்கு வரும் சூழல் ஏற்படும் என முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் போலுப்பள்ளியில் புதிய மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டிய பின் முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது:-

அதிமுக ஆட்சியில் புதிதாக 2,000 மருத்துவ இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. வளர்ந்த நாடுகளுக்கு இணையாக தமிழகத்தில் சுகாதார சேவை ஏற்படுத்தப்படுகிறது. கிராம மக்களுக்கு 254 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. கிராம மக்களுக்கு கண் நோய் தவிர்க்கும் மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.

குறுகிய காலத்தில் அதிக மருத்துவ மாணவர்கள் படிக்கும் இடங்களை அதிமுக அரசு உருவாக்கி உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் இருக்கும் வசதிகளை விட கூடுதல் வசதிகள் உள்ள  அரசு மருத்துவமனையாக செயல்படும். எதிர்காலத்தில் மக்கள் தனியாருக்கு செல்வதை விட அரசு மருத்துவமனைக்கு வரும் சூழல் ஏற்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story