கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சேலம்,
சேலத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
சேலத்தில் ரூ.20 கோடி செலவில் புற்றுநோய்க்கான கதிர் வீச்சு சிகிச்சை சிறப்பு மையம் அமைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. சீனாவில் கொரோனா பரவத்தொடங்கியதில் இருந்தே முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகிறோம். சீனா மட்டுமின்றி பிற நாடுகளுக்கும் கொரோனா பரவி வருவதால் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். போதுமான அளவுக்கு முகக்கவசங்கள் உபகரணங்கள், மருந்து பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று இல்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்டால் 2% மட்டுமே இறப்புக்கு வாய்ப்பு இருக்கிறது. இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைகளை அணுக வேண்டும். அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதால் பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story