நாமக்கல் மருத்துவ கல்லூரிக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
நாமக்கல்லில், 338 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள மருத்துவ கல்லூரிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
சென்னை,
தமிழகத்தில் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் 24 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில், 3,350 எம்.பி.பி.எஸ். இடங்கள் இருக்கின்றன. திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருவள்ளூர் ஆகிய 9 இடங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைப்பதற்கு மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில், நாமக்கல் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ரூ.338 கோடியே 76 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமையவுள்ள அரசு மருத்துவமனை, மருத்துவக்கல்லூரிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
இந்த விழாவில் தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ,தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, அமைச்சர் சரோஜா, அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்கிறார்கள். புதிய மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராமநாதபுரம், விருதுநகரில் 2 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story