தமிழக காவல்துறைக்கு ரூ.95.58 கோடி மதிப்பிலான 2,271 புதிய வாகனங்களை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்


தமிழக காவல்துறைக்கு ரூ.95.58 கோடி மதிப்பிலான 2,271 புதிய வாகனங்களை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்
x
தினத்தந்தி 6 March 2020 5:55 AM GMT (Updated: 6 March 2020 5:55 AM GMT)

தமிழக காவல்துறைக்கு ரூ.95.58 கோடி மதிப்புள்ள 2 ஆயிரத்து 271 வாகனங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார்.

சென்னை:

ரூ. 95.58 கோடி மதிப்பில் சட்டம்- ஒழுங்கு பராமரிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு 1,506 இருச்சக்கர வாகனங்கள், 31 ஸ்கார்ப்பியோ கார்கள், 510 பொலிரோ கார்கள், 50 வேன்கள், 100 சிற்றுந்துகள், 20 பேருந்துகள், 54 லாரிகள் என மொத்தம் 2,271 வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. 

தலைமை செயலகத்தில் நடைபெற்ற விழாவில், அவற்றை ஒப்படைக்கும் அடையாளமாக 41 வாகனங்களை முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

முன்னதாக விழாவுக்கு  வருகை தந்த முதலமைச்சருக்கு, உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், டிஜிபி திரிபாதி, சென்னை காவல் ஆணையர் விசுவநாதன் புத்தகங்களை வழங்கி வரவேற்றனர். விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

Next Story