பேராசிரியர் க. அன்பழகன் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி
பேராசிரியர் க.அன்பழகன் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
சென்னை,
தமிழக அரசியலில் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கிய பேராசிரியர் க.அன்பழகன், நள்ளிரவு 1.10 மணி அளவில் மரணம் அடைந்தார். அன்பழகன் மரணம் அடைந்ததை அறிந்ததும் மு.க.ஸ்டாலின் கண்ணீர் சிந்தினார். ஆஸ்பத்திரிக்கு வந்த தி.மு.க. நிர்வாகிகள் துக்கம் தாங்காமல் கண்ணீர் விட்டனர்.
அதனை தொடர்ந்து க.அன்பழகனின் உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு தி.மு.க. நிர்வாகிகள், அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த், பேராசிரியர் க. அன்பழகன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் பேட்டி அளித்த ரஜினிகாந்த், “பேராசிரியர் அன்பழகன் மறைவு மிகப்பெரிய இழப்பு” என்றார்.
Related Tags :
Next Story