நாகையில் புதிதாக அமையவுள்ள மருத்துவக் கல்லூரிக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்
நாகையில் புதிதாக அமையவுள்ள மருத்துவக் கல்லூரிக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
நாகப்பட்டினம்,
தமிழகத்தில் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் 24 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில், 3,350 எம்.பி.பி.எஸ். இடங்கள் இருக்கின்றன. திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருவள்ளூர் ஆகிய 9 இடங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைப்பதற்கு மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து தமிழக அரசு நாகை ஊராட்சி ஒன்றியம் ஒரத்தூர் பகுதியில் புதிய மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும் என அறிவித்தது. இதற்காக அந்த பகுதியில் 60.04 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து ரூ.366 கோடியே 85 லட்சம் மதிப்பில் புதிய மருத்துவக்கல்லூரிக்கான நிதி ஒதுக்கப்பட்டு பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டன.
இந்த நிலையில், நாகை ஊராட்சி ஒன்றியம் ஒரத்தூர் பகுதியில் புதிதாக அமையவுள்ள மருத்துவக் கல்லூரிக்கு இன்று முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன், துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் மற்றும் தமிழக அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர்.
அண்மையில் ராமநாதபுரம், விருதுநகரில் புதிய அரசு மருத்துவ கல்லூரிக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story