1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு மூன்றாம் பருவத்தேர்வு அடுத்த மாதம் 1-ந்தேதி தொடங்குகிறது


1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு மூன்றாம் பருவத்தேர்வு அடுத்த மாதம் 1-ந்தேதி தொடங்குகிறது
x
தினத்தந்தி 8 March 2020 1:21 PM IST (Updated: 8 March 2020 1:21 PM IST)
t-max-icont-min-icon

1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு மூன்றாம் பருவத்தேர்வு அடுத்த மாதம் 1-ந்தேதி தொடங்குகிறது.

சென்னை, 

1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கான மூன்றாம் பருவத்தேர்வு குறித்து சென்னை முதன்மை கல்வி அலுவலர், அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் ஆளுகைக்குட்பட்ட அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், சென்னை பள்ளிகள், மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள் மற்றும் சிறப்பு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான மூன்றாம் பருவத்தேர்வு அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந்தேதி தொடங்கி, 20-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது.

1, 8, 15, 17 மற்றும் 20 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைபெறும். 1, 3, 5-ம் வகுப்புகளுக்கு காலையிலும், 2, 4-ம் வகுப்புகளுக்கு மாலையிலும் தேர்வு நடைபெறும். ஒவ்வொரு தேர்வுக்கும் 2 மணி நேரம் ஒதுக்கப்படும். இதில் எவ்வித மாற்றமும் இன்றி தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story