மாநில திட்டக்குழு துணைத் தலைவராக பொன்னையன் பொறுப்பேற்பு


மாநில திட்டக்குழு துணைத் தலைவராக பொன்னையன் பொறுப்பேற்பு
x
தினத்தந்தி 12 March 2020 2:30 PM IST (Updated: 12 March 2020 2:30 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தின் மாநில திட்டக்குழு துணைத் தலைவராக பொன்னையன் பொறுப்பேற்றுக்கொண்டார்.

சென்னை,

தமிழ்நாடு மாநில திட்டக்குழுவானது 1971ஆம் ஆண்டு 25ஆம் தேதி மே மாதம் தொடங்கப்பட்டது.  தமிழகத்தின் மாநில திட்டக் குழுவானது முதல்-அமைச்சர் தலைமையில் செயல்பட்டு வருகிறது. முக்கியத்துவம் வாய்ந்த முதன்மைத் துறைகளில் தமிழக அரசுக்கு உரிய ஆலோசனைகள் தேவைப்படுவதால், மாநில திட்டக் குழுவுக்கு துணைத் தலைவரை நியமிப்பது அவசியமானதாகக் கருதப்படுகிறது.

அந்தவகையில் மாநில திட்டக் குழு துணைத் தலைவராக முன்னாள் அமைச்சா் சி.பொன்னையன் கடந்த (09-ம் தேதி) நியமிக்கப்பட்டார்.  இந்நிலையில் மாநில திட்டக்குழு துணைத் தலைவராக பொன்னையன் பொறுப்பேற்பேற்றார்.   சென்னை எழிலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், பாராளுமன்ற முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, வளர்மதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாநில திட்டக்குழு துணைத் தலைவராக பொறுப்பேற்றுள்ள பொன்னையன்  முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்குரிய நபா்களில் ஒருவராக  திகழ்ந்தவர்.

1977, 1980, 1984 மற்றும் 2001 ஆகிய ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா ஆகியோரின் அமைச்சரவைகளில், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், சட்டம், கூட்டுறவு, கல்வி, தொழில், வேளாண்மை, விளையாட்டு, நிதி, தகவல் தொழில்நுட்பம் என பல்வேறு துறைகளின் அமைச்சராகப் பொறுப்பு வகித்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story