கொரோனா வைரஸ்: சுகாதாரத்துறை அறிவுரையை மக்கள் அலட்சியம் செய்யக்கூடாது - கி.வீரமணி வலியுறுத்தல்


கொரோனா வைரஸ்: சுகாதாரத்துறை அறிவுரையை மக்கள் அலட்சியம் செய்யக்கூடாது - கி.வீரமணி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 13 March 2020 2:45 AM IST (Updated: 13 March 2020 12:53 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரசில் இருந்து தற்காத்துக்கொள்வது குறித்து சுகாதாரத்துறை வழங்கும் அறிவுரையை மக்கள் அலட்சியம் செய்யக்கூடாது என்று கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை,

கெரோனா வைரஸ் கொல்லும் நோய்த்தொற்று தாக்கிய உடனே மரணம் ஏற்படாது. அந்த நோய் தீவிரமடைந்து மரணமடையும் விகிதம் என்பது வெறும் 3 சதவீதம் தான் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. ‘வருமுன் காப்போம்’ என்பதை அடிப்படையாக கொண்டு அடிக்கடி கைகளை கழுவவேண்டும். முடிந்தவரை முழங்கை வரை கைகளை கழுவவேண்டும். கொரோனா அறிகுறி அறிந்தால் நம்மை நாமே தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும்.

கைகளை கழுவும்போது வெறுமனே குழாய் நீரில் நீட்டிவிட்டு கைகளை எடுத்துவிடக்கூடாது. சோப்பு போட்டு நன்கு தேய்த்து கழுவவேண்டும். கொரோனா அறிகுறி இருந்தால் மத்திய சுகாதார அமைச்சகத்தின் 24 மணி நேர உதவி எண்ணான 011-23978046 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். தமிழ்நாட்டில் வசிப்பவராக இருந்தால் 104 இலவச மருத்துவ சேவை எண்ணை பயன்படுத்தி தகவல் அளிக்கலாம். இதுதவிர 044-29510400, 29510500 அல்லது 9444340496, 8754448477 என்ற எண்களை தொடர்பு கொண்டு தகவல் கொடுக்கலாம்.

மக்கள் அலட்சியமாக இல்லாமல் இந்த விஷயத்தில் சுகாதாரத்துறை கூறுவதை கவனமாக பின்பற்றவேண்டும். இந்த நோய் பற்றி அலைப்பேசிகளில் கூறப்படும் அறிவுரை ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது. எல்லோருக்கும் புரியும் வகையில் தமிழிலும் சொல்லவேண்டும். தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் செயல்படட்டும். இது கட்சி பிரச்சினை இல்லை. மக்கள் பிரச்சினை. ஒன்றுபட்டு செயல்படுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story