குடியுரிமை திருத்தச் சட்டம்: இஸ்லாமிய தலைவர்களுக்கு தமிழக அரசு அழைப்பு
குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க இஸ்லாமிய தலைவர்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
சென்னை,
குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க சிறப்புக் கூட்டத்தை தமிழக ஏற்பாடு செய்துள்ளது.
இது தொடர்பாக தமிழக தலைமை செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,
குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க சிறப்புக் கூட்டம் நாளை மாலை 4 மணிக்கு சென்னை தலைமைச் செயலகம் பழைய கட்டிடம் இரண்டாவது தளத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு இஸ்லாமிய தலைவர்களுக்கு தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பான கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் தலைமைச் செயலாளர் பதில் அளிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story