டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.500 ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் - அமைச்சர் தங்கமணி அறிவிப்பு


டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.500 ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் -  அமைச்சர் தங்கமணி அறிவிப்பு
x
தினத்தந்தி 13 March 2020 3:55 PM IST (Updated: 13 March 2020 3:55 PM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.500 ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என அமைச்சர் தங்கமணி அறிவித்து உள்ளார்.

சென்னை

தமிழக சட்டப்பேரவை  கூட்டத்தில்  அமைச்சர் தங்கமணி பேசும் போது கூறியதாவது:-

டாஸ்மாக் பணியாளர்களுக்கான மாத  தொகுப்பூதியம் ரூ. 500 உயர்த்தி வழங்கப்படும். இது ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும். ஊதிய உயர்வுக்காக ஆண்டுக்கு ரூ. 15.42 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 

இந்த ஆண்டு 50 ஆயிரம் புதிய  இலவச விவசாய மின் இணைப்புகள்  வழங்கப்படும் என கூறினார்.

Next Story