‘அரியர்’ வைத்திருப்பவர்களுக்கு தேர்வு எழுத இறுதி வாய்ப்பு - அண்ணா பல்கலைக்கழகம் தகவல்
அரியர் வைத்திருப்பவர்களுக்கு தேர்வு எழுத இறுதி வாய்ப்பை அண்ணா பல்கலைக்கழகம் வழங்கி இருக்கிறது.
சென்னை,
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் என்ஜினீயரிங் கல்லூரிகளில் படித்து பாடப்பிரிவு தேர்வுகளில் அரியர் வைத்திருப்பவர்கள், மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்க பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து இருந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று அரியர் வைத்திருப்பவர்களுக்கு இறுதி வாய்ப்பை அண்ணா பல்கலைக்கழகம் வழங்கி இருக்கிறது.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
2000-ம் ஆண்டுக்கு பிறகு என்ஜினீயரிங் படிப்புகளில் தேர்ச்சி பெறாமல் அரியர் வைத்திருப்போருக்கு அண்ணா பல்கலைக்கழகம் இறுதி வாய்ப்பை வழங்கியுள்ளது. அப்படி தேர்வு எழுத இருப்பவர்களுக்கு வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறும் தேர்வுகளின் போது, வாய்ப்பு வழங்கப்படும்.
இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு https://coe1an-n-au-n-iv.edu என்ற இணையதளத்தில் விவரங்களை அறிந்து கொள்ளலாம். அரியர் தேர்வு எழுத விரும்புபவர்கள் வருகிற 23-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story