புதுச்சேரியில் புதிதாக 2 பேருக்கு கொரோனா பாதிப்பு


புதுச்சேரியில் புதிதாக 2 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 1 April 2020 9:26 AM IST (Updated: 1 April 2020 9:26 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.

புதுச்சேரி,

தமிழகத்தில்  நேற்று ஒரே நாளில் 57 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு, மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 124 ஆனது. 
புதுச்சேரியில் கொரோனா தொற்றால் ஒருவர் மட்டுமே பாதிக்கப்பட்ட நிலையில் இன்று  மேலும் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்று திரும்பிய புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் தற்போது புதுச்சேரியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.

Next Story