டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தாங்களாகவே மருத்துவ சோதனை செய்துகொள்ள வேண்டும் - டாக்டர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்


டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தாங்களாகவே மருத்துவ சோதனை செய்துகொள்ள வேண்டும் - டாக்டர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்
x
தினத்தந்தி 2 April 2020 3:30 AM IST (Updated: 2 April 2020 2:36 AM IST)
t-max-icont-min-icon

டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தாங்களாகவே மருத்துவ சோதனை செய்துகொள்ள வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை, 

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் குறித்து கடந்த சில நாட்களாக வெளியாகி வரும் தகவல்கள் மிகவும் அதிர்ச்சி அளிக்கின்றன. தமிழகத்தில் நேற்று (நேற்று முன்தினம்) ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருப்பதும், பாதிக்கப்பட்டவர்களில் 50 பேர் டெல்லியில் நடந்த ஒரு மாநாட்டில் பங்கேற்றதால் வைரஸ் தொற்று ஏற்பட்டதாக வெளியாகியுள்ள செய்தியும் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அதேபோல், தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்ட 124 பேரில் 80 பேர் அந்த மாநாடுக்கு சென்று திரும்பியவர்கள் அல்லது அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட அனைவரும் திடமாக இருக்கிறார்கள் என்றாலும் கூட, தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அடுத்த சில நாட்களில் அபாயகரமான அளவில் அதிகரிக்கும் என்பதுதான் கவலையளிக்கிறது. எனவே டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர்கள் தாங்களாக முன்வந்து கொரோனா ஆய்வுக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல், அனைத்து தரப்பினரும் வீடுகளை விட்டு வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். இதன்மூலம் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பதுடன், தங்களின் சமூகப்பொறுப்பையும் வெளிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story