தமிழகத்தில் 144 தடை உத்தரவு மீறல்; 42,035 பேர் மீது வழக்கு


தமிழகத்தில் 144 தடை உத்தரவு மீறல்; 42,035 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 2 April 2020 9:11 AM GMT (Updated: 2 April 2020 9:11 AM GMT)

தமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறிய 42,035 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

சென்னை,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டது.  சென்னை உள்பட தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்து தமிழக அரசு உத்தரவிட்டது.  பொதுமக்கள் தேவை இல்லாமல் வீட்டைவிட்டு வெளியில் வாகனங்களில் வரக்கூடாது என்று போலீசார் அறிவிப்பு வெளியிட்டனர். தடையை மீறி வாகனங்களில் வெளியில் சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

கொரோனா  அச்சுறுத்தலை தொடர்ந்து, அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை கண்காணிக்க காவல்துறை சார்பில் ஆறு ஏ.டி.ஜி.பி. அதிகாரிகளை நியமித்து டி.ஜி.பி. உத்தரவிட்டார்.

எனினும், தொடர்ந்து ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங்களில் செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  தமிழகத்தில் இதுவரை 144 தடை உத்தரவை மீறிய 42 ஆயிரத்து 035 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.  35,206 இரு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

ஊரடங்கை மீறியதற்காக ரூ.16 லட்சத்து 27 ஆயிரத்து 844 வரை அபராத தொகை விதிக்கப்பட்டு உள்ளது.

Next Story