தமிழகத்தில் 11, 12ம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் ஒத்திவைப்பு; அரசு தேர்வுகள் இயக்ககம்
தமிழகத்தில் 11, 12ம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்து உள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் வருகிற 14ந்தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இந்த உத்தரவால் பொதுமக்கள் வீடுகளை விட்டு தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கடந்த மார்ச் 2ந்தேதி தொடங்கிய பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 24ந்தேதியுடன் முடிவடைந்தது. இதேபோல், பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 4ந்தேதி தொடங்கியது.
11ம் வகுப்பில், 8 லட்சத்து 26 ஆயிரத்து 82 மாணவ மாணவியர்களும், 12ம் வகுப்பில், 8 லட்சத்து 16 ஆயிரத்து 358 மாணவ மாணவியர்களும் பொதுத்தேர்வு எழுதினர்.
12ம் வகுப்பு மாணவர்கள் முதன்முறையாக புதிய பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதினர். தமிழகத்தில் 11, 12ம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் வரும் ஏப்ரல் 7ந்தேதி முதல் தொடங்க இருந்தன. இந்நிலையில் இந்த பணிகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்து உள்ளது. விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story