இன்று ஒரு நாள் மட்டும் 23 லட்சத்து 40 ஆயிரத்து 778 பேருக்கு ரேஷன் கடைகளில் ரூ.1000 வழங்கப்பட்டுள்ளது - அமைச்சர் காமராஜ்


இன்று ஒரு நாள் மட்டும் 23 லட்சத்து 40 ஆயிரத்து 778 பேருக்கு ரேஷன் கடைகளில் ரூ.1000 வழங்கப்பட்டுள்ளது - அமைச்சர் காமராஜ்
x
தினத்தந்தி 2 April 2020 11:09 PM IST (Updated: 2 April 2020 11:09 PM IST)
t-max-icont-min-icon

இன்று ஒரு நாள் மட்டும் 23 லட்சத்து 40 ஆயிரத்து 778 பேருக்கு ரேஷன் கடைகளில் ரூ.1000 வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நாடு முழுவதும் கொரோனா நோய் தாக்குதல் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கிறார்கள்.

அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 நிவாரண உதவியாக வழங்கப்படும் எனவும், மேலும் ஏப்ரல் மாதத்துக்கான அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, கோதுமை, சமையல் எண்ணெய் ஆகியவையும் இலவசமாக வழங்கப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இந்நிலையில், இந்த நிவாரணம் வழங்கும் திட்டம் இன்று தொடங்கியது. அனைத்து ரேஷன் கடைகளிலும் நிவாரணத் தொகை 1000 வழங்கப்பட்டது. இன்று ஒரு நாள் மட்டும் 23 லட்சத்து 40 ஆயிரத்து 778 பேருக்கு ரேஷன் கடைகளில் ரூ.1000 வழங்கப்பட்டுள்ளது. இது மொத்தத்தில் 11.63% ஆகும் என்றும் அமைச்சர் காமராஜ் கூறினார்.

மேலும் நிவாரண பொருட்கள் பெற்றுக்கொள்ளும் பொழுது குடும்ப அட்டைதாரர்கள் சமூக இடைவௌியினை கடைப்பிடித்து கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story