தமிழகத்தில் 6 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது - அதிகபட்சமாக சேலத்தில் 103.64 டிகிரி பதிவு
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது. மேலும் சேலத்தில் அதிகபட்சமாக 103.64 டிகிரி பதிவாகியது.
சென்னை,
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. தற்போது ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீட்டுக்குள்ளே முடங்கி இருப்பதால் வெயிலின் கொடுமையில் இருந்து தப்பித்து உள்ளனர்.
கொரோனா அச்சம் காரணமாக வீட்டு ஜன்னல் மற்றும் கதவுகளை பெரும்பாலானோர் அடைத்தே வைத்து உள்ளனர். இதனால் வீடுகளுக்குள் மக்கள் புழுக்கத்தால் அவதியுறுகிறார்கள். இரவு நேரத்திலும் புழுக்கம் நீடிப்பதால் மக்கள் நிம்மதியாக தூங்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
தற்போது ஏப்ரல் மாதம் தொடங்கியதை அடுத்து வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதன்படி தமிழகத்தில் 6 மாவட்டங்களில் நேற்று வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக சேலத்தில் 103.64 டிகிரி வெயில் கொளுத்தியது. அதற்கு அடுத்தபடியாக தர்மபுரியில் 102.2 டிகிரியும், திருச்சியில் 101.3 டிகிரியும், கரூரில் 100.76 டிகிரியும், மதுரையில் 100.76 டிகிரியும், கோவையில் 100.04 டிகிரியும் வெயில் பதிவானது. சென்னையில் 97.88 டிகிரி பதிவாகி இருந்தது.
தமிழகத்தில் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story