கொரோனா பிரச்சினையில் மதசாயம் பூசுகிறவர்களை கிள்ளி எறிய வேண்டும் - கி.வீரமணி வலியுறுத்தல்
கொரோனா பிரச்சினையில் மதசாயம் பூசுகிறவர்களை கிள்ளி எறிய வேண்டும் என்று கி.வீரமணி வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா வைரஸ் நோய் உலக மக்களை அச்சுறுத்திக் கொண்டு உள்ளது. டெல்லியில் நடைபெற்ற சர்வதேச ‘தப்லீக்’ மாநாட்டில் பங்கு கொண்டவர்களின் மூலமாக குறிப்பாக தமிழ்நாட்டில் இந்த நோய் கணிசமான எண்ணிக்கையில் பரவியிருக்கிறது என்பது உண்மைதான் மறுப்பதற்கில்லை. அந்த மாநாடுதான் இந்த நோய் அதிகம் பரவலுக்கு மூலமாகும் என்று குற்றப்பத்திரிக்கை படிப்பதோ, பிரசாரம் செய்வதோ வேண்டாத விபரீதமான வேலை என்று எச்சரிக்கிறோம். மக்களின் மகத்தான ஒற்றுமை உணர்வுக்கு வேட்டு வைக்கும் வேலையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கொரோனாவைவிட மோசமான சக்திகளே. தமிழ்நாடு பா.ஜ.க. புதிய தலைவர் இந்தப் பிரச்சினையில் மதக்கண்ணோட்டம் தேவையில்லை என்று கூறியிருப்பது பாராட்டத்தக்கத்து.
இதுதான் தக்க தருணம் என்று மதச் சாயத்தை பூசத்துடிப்போரை முளையிலேயே கிள்ளி எறியும் நடவடிக்கையை மத்திய-மாநில அரசுகள் எடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story