தூத்துக்குடி துறைமுக ஊழியர் வீட்டில் 100 பவுன் நகைகள், பணம் கொள்ளை
தூத்துக்குடி துறைமுக ஊழியர் வீட்டில் இருந்து 100 பவுன் நகைகள் மற்றும் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன.
தூத்துக்குடி,
தூத்துக்குடி தாளமுத்து நகர் அருகே உள்ள பெரிய செல்வநகர் பகுதியில் வின்சென்ட் என்பவர் வசித்து வருகிறார். துறைமுக ஊழியரான இவர் தனது வீட்டின் வாசல் கதவை பூட்டாமல் ஒரு அறையில் தூங்கி கொண்டிருந்து உள்ளார்.
தமிழகத்தில் ஊரடங்கை முன்னிட்டு மக்கள் வீடுகளில் இருந்த நிலையில், சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி இவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் மற்றொரு அறையில் இருந்த பீரோவை உடைத்து, 100 பவுன் நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
ஊரடங்கு உத்தரவை பயன்படுத்தி மர்ம நபர்கள் கைவரிசையில் ஈடுபட்டு உள்ளனர் என கூறப்படுகிறது. இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story