தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக உயர்வு


தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்  எண்ணிக்கை 2 ஆக உயர்வு
x
தினத்தந்தி 4 April 2020 12:42 PM IST (Updated: 4 April 2020 12:42 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை,

கொரோனா வைரஸ் பாதிப்பின் வேகம் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் அதிகரித்துள்ளது. சுகாதாரத்துறை நேற்று  மாலை வெளியிட்ட தகவலின் படி, தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 411 ஆக உள்ளது. 

இந்த நிலையில், தமிழகத்தில்  கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விழுப்புரத்தை சேர்ந்த 51 வயது நபர் உயிரிழந்ததாக  தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.  உயிரிழந்த நபர் டெல்லி மாநாட்டிற்கு சென்று  வந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story