தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக இன்று மழை பெய்துள்ளது.
சென்னை,
தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் வெப்பம் பரவ தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், வெப்பம் தணியும் வகையில் பல்வேறு பகுதிகளில் இன்று பரவலாக மழை பெய்து உள்ளது. தஞ்சாவூரில் அதிராம்பட்டினத்தில் இன்று காலை 6.30 மணியில் இருந்து ஒரு மணிநேரம் வரை நல்ல மழை பெய்தது.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியில் அமைந்த தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து குளிர்வித்துள்ளது. கடலோர பகுதியான கன்னியாகுமரியில் நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மித அளவிலான மழை பெய்தது.
இதேபோன்று விருதுநகரில் அருப்புக்கோட்டை மற்றும் நகரை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று மழை பெய்துள்ளது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story