மற்ற நாடுகளிடம் இருந்து பாடம் கற்க வேண்டும்: கொரோனாவை ஒழிக்க ஊரடங்கு மட்டும் போதாது - ப.சிதம்பரம் டுவிட்டர் பதிவு


மற்ற நாடுகளிடம் இருந்து பாடம் கற்க வேண்டும்: கொரோனாவை ஒழிக்க ஊரடங்கு மட்டும் போதாது - ப.சிதம்பரம் டுவிட்டர் பதிவு
x
தினத்தந்தி 6 April 2020 3:15 AM IST (Updated: 6 April 2020 2:22 AM IST)
t-max-icont-min-icon

மற்ற நாடுகளிடம் இருந்து பாடம் கற்க வேண்டும், கொரோனாவை ஒழிக்க ஊரடங்கு மட்டும் போதாது என்று ப.சிதம்பரம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

சென்னை,

காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

பிரதமர் அறிவுரையை ஏற்று ஊரடங்கை கடைப்பிடிக்கிறோம். ஒலி எழுப்பினோம், இன்று ஒளி ஏற்றுவோம். ஒலியும், ஒளியும் மட்டுமே கொரோனா தொற்றை ஒழிக்க முடியாது என்று விஞ்ஞானம் கூறுகிறது.

ஊரடங்கு மட்டும் போதாது, மிக அதிகமாக மிகப்பரவலாக சோதனை செய்ய வேண்டும் என்று மற்ற நாடுகளிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஊரடங்கு மற்றும் கூடுதல் சோதனை தாம் நல்ல விளைவுகளைத் தரும் என்று ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் நடக்கும் அறிவுறுத்துகின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story