தமிழகத்தில் நோய் அறிகுறி இல்லாமலேயே சிலருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிப்பு; கவனம் தேவை முதல்வர் பழனிசாமி
தமிழகத்தில் நோய் அறிகுறி இல்லாமலேயே சிலருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.
சென்னை
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து 2-வது முறையாக ஆட்சியர்களுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிநிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனாவை தடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 38 கொரோனா ஆய்வகங்கள் விரைவில் செயல்படத் தொடங்கும்.
4612 பேருக்கு தமிழகத்தில் கொரோனா ஆய்வு செய்யப்பட்டுள்ளது.தற்போது வரை தமிழகத்தில் 571 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுக்கைகள் சிகிச்சைக்கு தயாராக உள்ளன.தமிழகத்தில் நோய் அறிகுறி இல்லாமலேயே சிலருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அறிகுறி இல்லாமலேயே கொரோனா வருவதால் மக்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்
டெல்லி மாநாட்டுக்கு சென்றவர்கள் தாங்களாகவே வந்து பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டனர். வீட்டு கண்காணிப்பில் உள்ளவர்களுக்கு வீடு தேடிச் சென்று அத்தியாவசிய பொருட்கள் கொடுக்கப்படுகின்றன.
அரிசி ரேசன் கார்டுதாரர்களுக்கு மட்டுமே அரசின் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும். தமிழகத்திற்கு முதற்கட்டமாக 500 கோடி ரூபாய் மத்திய அரசிடம் இருந்து வந்துள்ளது
21 நாட்களுக்கு பிறகு நோயின் தீவிரத்தை பார்த்த பிறகு தான் பள்ளித் தேர்வுகள் குறித்து முடிவு செய்யப்படும்.
புதிதாக 2500 வெண்டிலேட்டர்கள் வாங்குவதற்கு கொள்முதல் ஆணை கொடுக்கப்பட்டுள்ளது.ரேபிட் டெஸ்ட் கிட்ஸ் சுமார் 1 லட்சம் வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்95 உள்ளிட்ட முகக்கவசங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் போதுமான அளவிற்கு கையிருப்பில் உள்ளன/
தமிழகத்திற்கு வரும் 9ந் தேதி ரேபிட் டெஸ்ட் கிட்ஸ் வந்துவிடும் - 10ந் தேதி முதல் ரேபிட் டெஸ்ட் கிட்ஸ் மூலம் சோதனை நடைபெறும.
மக்களை துன்புறுத்து ஊரடங்கு சட்டத்தை அமல்படுத்த முடியாது. மக்களை சிரமப்படுதாமல் தடுப்பு பணியில் அரசு ஈடுபட்டு வருகிறது.
தமிழ்நாடு முழிதிருத்துவோர் வாரியம் உள்பட அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.1000 நிவாரண நிதி வழங்கப்படும்.
இக்காட்டான் சூழ் நிலையில் பணியாற்றும்காவல் துறையினருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என கூறினார்.
Related Tags :
Next Story