தேவையின்றி சுற்றி திரிபவர்களுக்கு சாலைப்போக்குவரத்து பணி - ஜி.கே.வாசன் கோரிக்கை


தேவையின்றி சுற்றி திரிபவர்களுக்கு சாலைப்போக்குவரத்து பணி - ஜி.கே.வாசன் கோரிக்கை
x
தினத்தந்தி 8 April 2020 2:45 AM IST (Updated: 8 April 2020 2:05 AM IST)
t-max-icont-min-icon

தேவையின்றி சுற்றி திரிபவர்களுக்கு சாலைப்போக்குவரத்து பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை, 

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகமாகிக்கொண்டே போகிறது. அப்படி இருக்கும்போது அவசியமில்லாமல் இருசக்கர வாகனப்போக்குவரத்தை பலர் மேற்கொள்வது கண்டிக்கத்தக்கது.

ஊர் சுற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் போக்குவரத்து காவல்துறையினரிடம் சிக்கினால் சிறு தண்டனை வழங்கப்படுகிறது. இருந்தாலும் அவர்கள் திருந்தியதாக தெரியவில்லை. அரசின் விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு உடனடி தண்டனையாக காவல்துறையின் சாலைப்போக்குவரத்துப் பணியில் காலை முதல் மாலை வரை ஊரடங்கு முடியும் வரை ஈடுபடுத்த வேண்டும். இதுதொடர்பாக தமிழக அரசு, காவல்துறைக்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story